தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் இரு தரப்பினர் இடையே இரண்டாண்டுகளாக முன்விரோதம இருந்துவருகிறது. இதுதொடர்பான தகராறு காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனிடையே ஒரு தரப்பு தங்கள் சமூக மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, மாற்று சாமூகத்தை சேர்ந்தவர்களுக்கு கடைகளில் எதும் கொடுக்கக் கூடாது என்று தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அதே பகுதியில் உள்ள கடைக்கு வந்த குழந்தைகளிடம் அந்த கடைக்காரர், உங்களுக்கு திண்படன் கிடையாது. ஊரல கட்டுப்பாடு வந்திருக்கு. இதை உங்க வீட்டில போய் சொல்லுங்கள் என்று சொல்கிறார். இதுகுறித்த வீடியோ வெளியாக சர்ச்சையை கிளப்பியது. அந்த குழந்தைகள் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இந்த வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சங்கரன்கோவில் கோட்டாட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் வட்டாட்சியர் பாபு அந்த கடைக்கு சீல் வைத்தார். அதற்கு முன்னதாவே பெட்டிக்கடை உரிமையாளர் மகேஸ்வரன், ராமச்சந்திர மூர்த்தி இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க:‘இஸ்லாமிய சிறுவனை தாக்கிய மர்ம நபர்...காவல்துறை விசாரணை