தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அடுத்து நெற்கட்டும்செவல் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அப்பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்றுவருகின்றனர்.
பள்ளியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் நேற்று (பிப். 17) தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
அம்மனுவில், "நாங்கள் பள்ளிக்குச் செல்கையில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் தகாத வார்த்தைகளைச் சொல்லி திட்டியும், தாக்கியும் வருகின்றனர். இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடமும், அப்பகுதி காவல் துறையினரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் மனு அளித்துள்ளோம்" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் கடந்த 5 ஆண்டுகளில் 54% சாலை விபத்துகள் குறைவு: மாநகர காவல் ஆணையர்