தென்காசி: கடையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து கனிமவளங்கள் தினமும் ஆயிரக்கணக்கான ராட்சத லாரிகளில் கேரளாவிற்குக் கொண்டு செல்லப்படுகிறது. இதனைத் தடுக்க சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் கடையம் சின்னத்தேர் திடலில் இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
இந்தநிலையில் கீழ கடையம் ஊராட்சி தலைவர் பூமிநாத் மகன் அஸ்வின் சுபநாத் (LKG) மற்றும் அவரது தம்பி சந்திரசேகர் மகள்கள் 6 -ம் வகுப்பு படிக்கும் சுப பிரியங்கா, 4 -ம் வகுப்பு படிக்கும் சபிதா ஆகிய 3 பேரும் கடந்த சில தினங்களாக பூமிநாத் மற்றும் சந்திரசேகர் கனிம வள கொள்ளையைக் கண்டித்து போராட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.
இதுகுறித்து இவரது குழந்தைகள் சுப பிரியங்கா, சபிதா தங்கள் தாயாரிடம் விபரம் கேட்டுள்ளனர். தொடர்ந்து இவர்கள் இருவரும் மற்றும் அவர்களது தம்பி அஸ்வின் சுபநாத் ஆகிய 3 பேரும் கனிமவள கொள்ளையைத் தடுத்து நிறுத்த உத்தரவு பிறப்பிக்குமாறு முதல்வர் ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதினார்.
அதில் கனிமவளத்தைத் தடுத்த நிறுத்தாவிட்டால் வரும் 14 - ம் தேதி கடையம் சின்னத்தேர் திடலில் பட்டினி போராட்டம் நடத்தப் போகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளனர். கனிம வள கொள்ளையைத் தடுக்க சிறுமிகள் முதல்வருக்கு எழுதிய கடிதம் கடையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஷையும் படிங்க: jacto geo: ஜாக்டோ-ஜியோ அறிவித்த கோட்டை முற்றுகை போராட்டம் ஒத்திவைப்பு!