தென்காசி: சங்கரன்கோவிலில் ஆயிரம் ஆண்டுகள் பிரசித்தி பெற்ற சங்கரநாராயணசாமி கோயில் ஆடித்தபசு திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் இரவில் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருவது வழக்கம்.
ஆடித்தபசு 9ஆம் திருநாளான இன்று வெகுசிறப்பாக தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5 மணியளவில் கோமதி அம்பாள் தேரில் எழுந்தருளினார். இதைத் தொடர்ந்து கோமதி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றதும் காலை 10.30 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது.
இங்கு எழுந்தருளும் அம்மனை காண பக்தர்களின் கூட்டம் தினசரி அதிகமாகவே காணப்படுகிறது. இதில் சுற்று வட்டார கிராமப்புரத்தில் இருந்து மட்டும் இல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சங்கரநாராயணன் திருக்கோயிலுக்கு இன்று தேரோட்ட திருவிழாவை காண்பதற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.
மேலும் திருவிழாவானது மேளதாளங்கள், சிவ வாத்தியங்கள் முழங்க வான வேடிக்கைகளுடன் தேரோட்டத் திருவிழா நடைபெற்றது. இந்த தேரோட்டம் ரத வீதிகளிலும் சுற்றி அனைத்து பக்தர்களுக்கு காட்சியளித்தது. கோமதி அம்மாள் திருத்தேரை ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: "பாத யாத்திரை அல்ல;பாவ யாத்திரை" - அமித்ஷா, அண்ணாமலையை விமர்சித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பரிகாரஸ்தலம்: சங்கரநயினார் திருக்கோயில் தமிழகத்தின் மிக பழமையான கோயிலில் ஒன்றாகும். இங்கு செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் இந்த கோயிலுக்கு சுற்றுவட்டாரப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். மேலும் இந்த கோயிலில் சிறப்பு அம்சம், பக்தர்கள் வேண்டி வந்த காரியங்கள் நடைபெறும் என்பது தான். ஆதனால் சங்கரநயினார் வழிபட நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வருகிறார்கள்
மேலும் இங்கு அதிகப்படியான திருமண நிகழ்ச்சி வைபவங்கள் நடைபெறுவதும் வழக்கம். அதே போல் சங்கரநயினார் திருக்கோயில் முக்கியமான பரிகார ஸ்தலமாக கூறுகின்றனர். இங்கு பிரசித்தி பெற்ற நாகதோஷம் பரிகாரத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினசரி வருவது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு: இன்று நடைபெற்ற விழாவில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு தென்காசி பாதுகாப்பு மாவட்ட கண்காணிப்பாளர் சாம்சன் தலைமையில் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து சுமார் 500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருக்கோயிலில் எந்த விதமான அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கும் அனைவரும் சாமியை காண எந்தவிதமான இடையூறுகள் ஏற்படாமல் இருப்பதற்கு மாவட்ட நிர்வாகமும் காவல்துறையினரும் பல சிறப்பு ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி 2 மணி நேரமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது
இதைத்தொடர்ந்து ஆடித்தவசுத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தவசு காட்சி ஜூலை 31ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக் கணக்கில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: செப்டம்பருக்குள் சேலத்தில் விமான சேவை - எஸ்.ஆர்.பார்த்திபன் எம்பி