தென்காசி: நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் பறவைகளும் உயிரினங்களும் தண்ணீருக்காக அங்குமிங்கும் சுற்றித்திரிந்து வருகின்றன. இந்நிலையில் அவற்றின் தாகத்தினை தீர்க்கும் விதமாக சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலையத்தில் அமைந்துள்ள மரங்களில் காவல் ஆய்வாளர் மாதவன் ஏற்பாட்டில் பறவைகளுக்கான உணவும் தண்ணீரும் வைக்கப்பட்டுள்ளது.
பறவைகளின் தாகத்தைத் தீர்க்கும் விதமாக உணவும் தண்ணீரும் வைத்திருப்பதைப் பார்த்து, காவலர்களை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: சீனியர் கலீமும்... ஜூனியர் சின்னதம்பியும்.. காட்டுக்குள் ஸ்பெஷல் டாஸ்க்..