தென்காசி: சொக்கம்பட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சிங்கிலிபட்டி பெரிய பாலம் அருகே மணல் திருட்டு நடைபெறுவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் துறையினர் ட்ரோன் கேமரா உதவியுடன் சம்பவயிடத்தில் சோதனை செய்தனர்.
அப்போது அங்கு சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட கிருஷ்ணமூர்த்தி (29), ஜோதிராஜ் (32) உள்பட 4 பேரை காவல்துறையினர் கண்டறிந்தனர். இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி, ஜோதி ராஜ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு டிப்பர் லாரிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் டிராபிக் சிக்னல்களுக்கு ஒத்திகை!