ETV Bharat / state

ஊரடங்கு உத்தரவு மீறல்: 1500க்கும் மேற்பட்டோர் கைது!

திருநெல்வேலி: தென்காசியில் அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்த 1,675 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு மீறிய 1500க்கு மேற்பட்டோர் கைது

author img

By

Published : May 1, 2020, 12:46 PM IST

தென்காசி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து நாள்களாக இம்மாவட்டத்தில் யாருக்கும் கரோனா நோய் தொற்று ஏற்படவில்லை என்று அறிவிக்கப்பட்டது.

இதை அப்படியே தக்கவைத்து கொள்ள வேண்டும் என்பதற்காக அம்மாவட்ட காவல் துறையினர், ஊரடங்கு உத்தரவை தீவிரமாக பின்பற்றி வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவு மீறிய 1500க்கு மேற்பட்டோர் கைது

அந்தவகையில் அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றித்திரியும் நபர்களை காவல் துறையினர் கைது செய்வதுடன் வாகனத்தையும் பறிமுதல் செய்கின்றனர்.

அந்தவகையில் தென்காசியில் இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய வகையில் காவல் துறையினர், 1271 வழக்குகள் பதிவு செய்து 1,675 நபர்களை கைது செய்துள்ளனர். மேலும் இதுவரை அம்மாவட்டம் முழுவதும் 5,678 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தென்காசி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா உறுதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.