ETV Bharat / state

பெட்ரோல் விலை உயர்வை நாசுக்காக கலாய்ந்த ராகுல்... மக்களிடையே எழுந்த சிரிப்பலை...!

author img

By

Published : Mar 1, 2021, 6:26 AM IST

தென்காசி: பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தேவையில்லாமல் கார் இஞ்சின் ஓடுவதை தவிர்க்கவே டிரைவரை அழைத்து இன்ஜினை ஆஃப் செய்ய சொன்னேன் என ராகுல் காந்தி தெரிவித்ததால் மக்களிடையே சிரிப்பலை எழுந்தது.

பெட்ரோல் விலை உயர்வை நாசுக்காக கலாய்ந்த ராகுல்...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று (பிப்.28) காரில் இருந்தவாறே அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மக்களிடையே பரப்புரை செய்தார்.

ராகுல் காந்தியின் பரப்புரைப் பேச்சை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மொழிப்பெயர்த்து மக்களுக்கு தெரிவித்தார். தொடர்ந்து தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர், “பெட்ரோல், டீசல், கேஸ் உள்ளிட்டவற்றின் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கிறது. ஒரே நாடு, ஒரே கலாசாரம் எனப் பேசிக் கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, மக்கள் மீது கிஞ்சிற்றும் அக்கறை இல்லாமல் செயல்படுகிறார்.

தமிழ்நாட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இயக்குவது போல் தமிழர்களையும் பிரதமர் மோடி இயக்க நினைக்கிறார். விரைவில் அந்த ரிமோட் உள்ளே இருக்கும் பேட்டரியை மக்கள் எடுத்து வீசப் போகிறார்கள் என்பது மோடிக்கு தெரியவில்லை. இதை மோடியும் புரிந்து கொள்ள வேண்டும் என்பது நான் எனது ஆசை” என்றார்.

கூட்டத்தில் ராகுல் காந்தி பேசிக்கொண்டு இருந்தபோது தனது கார் ஓட்டுநர் அலங்கார் என்பவரை அழைத்து கார் இன்ஜினை அனைத்து வைக்குமாறு கூறினார்.

திடீரென ராகுல்காந்தி இப்படி சொல்லியது எதற்கென்றே தெரியாமல் மக்கள் விழித்துக் கொண்டிருந்தபோது, பெட்ரோல் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தனது கார் இஞ்சின் ஓடிக் கொண்டிருந்ததால் டிரைவரை அழைத்து இன்ஜினை அணைத்து வைக்குமாறு தெரிவித்தேன் என அவர் சொன்னதும் அங்கு இருந்த மக்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.

இதையும் படிங்க : வேட்பாளர்கள் தேர்வுக்கு டீம் ரெடி - கமல் ஹாசன் அறிவிப்பு !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.