ETV Bharat / state

தென்காசி மாவட்ட பாஜக நிர்வாகி மீது பாலியல் புகார்.. புளியங்குடி போலீசார் வலைவீச்சு! - பாஜக பிரமுகருக்கு போலீஸ் வலைவீச்சு

Tenkasi BJP: தென்காசி மாவட்ட முன்னாள் பாஜக மாவட்டத் தலைவரும், தற்போதைய மாநில செயற்குழு உறுப்பினருமான ராமராஜா மீது அளிக்கப்பட்ட பாலியல் புகாரின் அடிப்படையில் புளியங்குடி போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Puliyangudi police looking for former Tenkasi BJP district president who is absconding in a sex abuse complaint
முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் மீது பாலியல் புகார்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 2, 2023, 4:30 PM IST

தென்காசி: முன்னாள் பாஜக மாவட்ட தலைவரும், தற்போதைய மாநில செயற்குழு உறுப்பினருமான ராமராஜா (48) புளியங்குடி அருகே தலைவன்கோட்டை பகுதியில் அதிகாரி வீட்டு தெருவில் வசித்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் இளம்பெண் ஒருவர், அவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதால் குழந்தைகளுடன், மாமனார் வீட்டின் மாடியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், அந்த இலம்பெண்ணை பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் ராமராஜா தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும், ராமராஜா மாடி வழியாக இளம்பெண்ணின் வீட்டிற்கு அத்துமீறி சென்று ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து அந்த இளம்பெண் குடும்பத்தாருடன் புளியங்குடி காவல் நிலையதில் புகார் அளித்துள்ளார். இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட புளியங்குடி போலீசார் தலைமறைவாக உள்ள பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் ராமராஜாவை தேடி வருகின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மாநிலத் தலைவர் அண்ணாமலை பாஜக நிர்வாகிகள் பல்வெறு விதமான பணிகளை மேற்கொள்ளும் படி முடுக்கி விட்டுள்ளார். மேலும் நவம்பர் மாதம் முழுவதும் தமிழகம் முழுவதும் பாஜகவினர் பாஜக கொடி கம்பத்தை நட வேண்டும் என பாஜாகவினருக்கு அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவரும், மாநில செயற்குழு உறுப்பினருமான ராமராஜாவை பாலியல் புகாரில் போலீசார் தேடிவருவது தென்காசி மாவட்டத்தில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை எற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: தமிழகம் மட்டுமல்ல.. இந்தியாவைக் காப்பாற்ற வேண்டிய கடமை திமுகவிற்கு இருக்கிறது..! முதலமைச்சர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு மடல்..!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.