தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி உட்பட்ட 19 வார்டு பகுதியான பட்டத்தூரில், அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பொதுமக்கள் நேற்று (மார்ச் 03) முதல் தெருக்களில் கருப்பு கொடி கட்டி, தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று (மார்ச் 04) நகராட்சி அலுவலர்கள் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அலுவலர்கள், நகராட்சியின் வரைபடம் எங்களிடம் இப்போது இல்லை என்று தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சங்கரன்கோவில் - கோவில்பட்டி சாலையில் அமர்ந்து சாலை மறியல் செய்ய முயற்சித்தனர். பின்னர் அவர்களே கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஒற்றைக்காலில் நின்று போராட்டம்!