தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நெசவுத் தொழில் பிரதானமாக உள்ளது. இங்கு ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
![Workers Strike](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tki-02-power-loom-stricke-tn10038_22012021173701_2201f_1611317221_15.jpg)
இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நெசவு செய்வதற்கான இயந்திரங்களுக்கு நூலின் விலை ரூ. 1455ஆக இருந்தது. தற்போது, அதன் விலை கடுமையாக உயர்ந்து ரூ. 1845ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நூலின் விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
![Workers Strike](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tki-02-power-loom-stricke-tn10038_22012021173701_2201f_1611317221_88.jpg)
ஆனால், இதை மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்ளாததால் விசைத்தறி தொழிலாளர்கள் சங்கரன்கோவிலில் இன்று (ஜனவரி 23) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், சங்கரன்கோவில் நகர் பகுதிகளில் உள்ள விசைத்தறிக் கூடங்கள் இயங்கவில்லை. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் ரூ. 50 லட்சம் மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
![Workers Strike](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tki-02-power-loom-stricke-tn10038_22012021173701_2201f_1611317221_889.jpg)