இந்தியா முழுவதும் ஒன்பது மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் வீடுகளிலும், அலுவலகங்களிலும் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று தமிழ்நாட்டில் உள்ள சென்னை, மதுரை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
அமலாக்கத்துறை சோதனையை கண்டித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் வேளாண் சட்டங்களை திசைதிருப்ப அமலாக்கத்துறை இந்த சோதனையை நடத்துவதாக குற்றஞ்சாட்டினர்.
இதையும் படிங்க: ’விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறார் மோடி’