ETV Bharat / state

கேரளாவிலிருந்து வந்த நோய்வாய்ப்பட்ட கோழிகள் - திருப்பி அனுப்பிய தமிழ்நாடு காவல் துறை - Sick chicken

தென்காசி: புளியரை வழியாக கேரளவில் இருந்து நோய்பாதித்த கோழிகளை தமிழ்நாட்டிற்கு ஏற்றி வந்த லாரியை கேரள மாநிலத்திற்கே காவல் துறையினர் திருப்பி அனுப்பியுள்ளனர்.

police sent back the sick chickens brought from Kerala

author img

By

Published : Sep 6, 2020, 4:12 PM IST

தென்காசி மாவட்டம் புளியரை அருகே கேரளா-தமிழ்நாடு எல்லைப் பகுதிக்கான சோதனைச்சாவடி அமைந்துள்ளது. இந்தப் பகுதி வழியாக கேரள மாநிலத்தில் இருந்து நோய் வாய்ப்பட்டு இறந்து விடும் தருவாயில் இருந்த சுமார் 10 ஆயிரம் கோழிகளை ஏற்றிக்கொண்டு இரண்டு லாரிகள் வருவதாக காவல் துறையயினருக்கு தகவல் கிடைத்தது.

இத்தகவல் அடிப்படையில் தென்காசி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுகுனா சிங் உத்தரவின் பேரில் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புளியரை வழியாக நோய் வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் இருந்த அந்த கோழிகளை தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூர் பகுதிக்கு ஏற்றிக்கொண்டு வந்ததாகவும், கோழிகளுக்கு உரிய மருத்துவர் சான்று இல்லாமல் ஏற்றி வந்ததும் தெரியவந்தது.

உடனடியாக தமிழ்நாடு காவல் துறை அந்த லாரியை மடக்கிப் பிடித்து கேரள மாநிலம் ஆரியங்காவு பகுதியில் கொண்டு விட்டு வந்தனர்.

முறையான அனுமதி சீட்டு உள்ளிட்ட எதுவும் இல்லாமல் கேரள மாநிலத்தில் உள்ள கோழிப் பண்ணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு எதற்காக ஏற்றிவரப்பட்டது என வாகன ஓட்டுநரிடம் விசாரணை நடத்தியதில் அவர் கூறிய தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால் லாரியை திருப்பிக்கொண்டு விட்டு வந்ததாகவும், இனி அத்துமீறி வந்தால் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.