ETV Bharat / state

குடும்பத்தால் கைவிடப்பட்ட நபரின் உடலை நல்லடக்கம் செய்த காவல் துறையினர் - தென்காசி காவல்துறையினர்

தென்காசி: குடும்பத்தால் கைவிடப்பட்ட நபரின் உடலை நல்லடக்கம் செய்த காவல்துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

காவல் துறையினர்
காவல் துறையினர்
author img

By

Published : Oct 22, 2020, 7:16 AM IST

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழப்பாவூர் பகுதியில் வசித்து வந்தவர் சிவபெருமாள் (60). இவரது தவறான நடத்தை மற்றும் பழக்க வழக்கங்கள் காரணமாக குடும்பத்தினராலும், சமுதாயத்தினராலும் ஒதுக்கி வைக்கப்பட்டார். மூன்று திருமணங்கள் செய்திருந்த நிலையிலும், அவரின் தவறான நடத்தை காரணமாக மனைவிகள் யாரும் அவருடன் சேர்ந்து வாழவில்லை.

இந்நிலையில் இவர் கடந்த வாரம் உடல்நிலை சரியில்லாமல் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் தானாக சென்று உள்நோயாளியாக சேர்ந்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் கடந்த திங்கட்கிழமை (அக்.19) மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம், சிவபெருமாள் மரணம் தொடர்பாக பாவூர்சத்திரம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தது.

அதன்பேரில் காவல்துறையினர் சிவபெருமாள் உறவினர் மற்றும் சமுதாய தலைவர்களை தொடர்புகொண்டு பேசியபோது, அவர்கள் உடலை வாங்க மறுத்து விட்டனர். இதனையடுத்து காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்துவரும் கிருஷ்ணன் தனது சொந்தப் பணத்தில் இறந்துகிடந்த சிவபெருமாளுக்கு இறுதிச் சடங்கு செய்ய முன்வந்தார்.

அதற்கு தேவையான ஏற்பாடுகளை, தலைமை காவலர் ஜான்சன் மூலம் செய்து, சிவபெருமாள் உடலை மருத்துவமனையிலிருந்து பெற்று, நேற்று (அக்.21) தென்காசி மின்மயானத்தில் நல்லடக்கம் செய்தார். காவல்துறையினரின் இச்செயலை பலரும் வெகுவாக பாராட்டினர்.

இதையும் படிங்க: அம்மிக்கல்லை தலையில் போட்டு தாயை கொலை செய்த மகன் தற்கொலை முயற்சி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.