தென்காசி மாவட்டம் கடையம் அருகே மடத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் பாலமுருகன்-செந்தாமரை தம்பதி. பாலமுருகன் அதே பகுதியில் எம்சான்ட் மணல் தயாரிக்கும் தொழில் செய்துவருகிறார். அவரிடம் போலீசார் லஞ்சம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் செந்தாமரை மீது போலீசார் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால், செந்தாமரை திருநெல்வேலி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் லஞ்சம் கேட்டு போலீசார் வந்ததாகவும், கணவர் இல்லாததால் என்னை தாக்கியதாகவும் செந்தாமரை தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம், "கடந்த சனிக்கிழமை (செப். 17) வீட்டில் இருந்த போது, இரண்டு காவலர்கள் வந்தனர். அதில் ஒருவர் நான் இருந்த அறையின் கதவை தள்ளிக் கொண்டு உள்ளே வந்தார்.
நான் விசாரித்த போது எனது கணவரை தேடி வந்ததாக தெரிவித்தார். அவர் இல்லை என்றேன். என்னை அந்த காவலர் கழுத்தை பிடித்து தள்ளினார். அப்போது எனக்கு காயம் ஏற்பட்டது. ஆண்கள் இல்லாத நேரத்தில் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்றேன். அப்போது என்னை தரக்குறைவாக பேசினார். பொம்பள எதிர்த்து பேசுவதா என்று மட்டம் தட்டி ஆபாசம பேசினார்.
லஞ்சம் வாங்கவே எனது கணவரை தேடுகிறார்கள். கடந்த ஆறு மாதமாக பல்வேறு பிரச்சனைகளால் தொழில் நடக்கவில்லை. இந்த சூழ்நிலையில் காவல்துறையினர் இதுபோன்று லஞ்சம் கேட்டால் தொந்தரவு கொடுக்கின்றனர் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆதார் சேவை மையத்திற்கு வரும் பொதுமக்கள் கடும் அவதி