தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நாலுவாசன்கோட்டை பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாகவும், போன் செய்தால் நேரடியாக வீட்டிற்கே வந்து விநியோகம் செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், நாலுவாசன்கோட்டையில் காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். பின்னர், அப்பகுதியில வசிக்கும் ஒருவரின் மூலம் கஞ்சா விற்பனையாளரை தொடர்பு கொண்டு வரவழைத்தனர். விநியோகத்திற்காக பறந்து வந்த நபரை, காவல் துறையினர் கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர்
அதில், அவர் தூத்துக்குடி மாவட்டம் இனாம்மணியாட்சியைச் சேர்ந்த மகேஷ்குமார் என்பதும், ஒரு கஞ்சா பொட்டலம் 200 ரூபாய்க்கு விற்பனை செய்வதும் தெரியவந்தது. மேலும், அவரிடமிருந்து 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த குருவிகுளம் காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.