தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள தேன்பொத்தை கிராமத்தில் வசித்து வரும் ஏழு சமுதாய மக்களுக்கு சொந்தமான சுடுகாட்டை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளார்.
இதை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து அவர்களிடம் காவல்துறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து விட்டு கலைந்துச் சென்றனர்.
அந்த மனுவில், “தேன்பொத்தை கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றோம். இங்கு இறப்பவர்களின் சடலங்களை பெரியபிள்ளை வலசை கிராமத்தில் உள்ள மயான இடத்தில் பல ஆண்டுகளாக புதைத்து வருகிறோம். இந்நிலையில், தனிநபர் ஒருவர் அந்த நிலம் தனக்கு சொந்தமானது எனக் கூறி ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தனர்.