தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதியான தென்காசி மாவட்டம் புளியரை பகுதி வழியாக நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள், வியாபாரிகள், சுற்றுலாப் பயணிகள் பயணித்து வருகின்றனர்.
இப்பகுதியில் கரோனா தொற்று பரவல் காரணமாக அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து வருபவர்களை கண்காணிக்கும் பொருட்டு தற்காலிகமாக சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது. இந்த கரோனா சோதனை சாவடியில்தான், காவலர் சோதனை சாவடியும் இயங்கி வந்தது.
இந்நிலையில் புளியரை பகுதியில் கட்டப்பட்ட நிரந்தர சோதனைச் சாவடியை மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங், துணை காவல் கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தென்காசியில் 44, 702 வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை