தென்காசி: ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நாய்க்கடிக்கு தடுப்பூசி போடுவதற்காக ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அங்குப் பணியில் இருந்த செவிலியர், "நாய்க்கடிக்கு ஒரு நபர் வந்தால் தடுப்பூசி போட மாட்டோம்.
கூடுதலாக நாய்க்கடி நோயாளிகள் வந்தால் மட்டுமே தடுப்பூசி போடுவோம்" எனத் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நோயாளி காரணம் கேட்டதற்கு, "அதற்கான மருந்தை எடுத்தால் குறைந்தது நான்கு பேருக்காவது போட வேண்டும். ஒருநபருக்கு மட்டும் போட்டால் மீதமுள்ள மருந்தை உபயோகப்படுத்த முடியாது" என செவிலியர் கூறியுள்ளார்.
இதனை நோயாளி தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்தக் காணொலியை பார்க்கும் இணையதள வாசிகள் நர்ஸ் கடிக்கு நாய் கடி பராவாயில்லை எனக் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: SPECIAL - மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் துயரம்.. பச்சிளம் பிஞ்சுகளின் மரணம் அதிகரிப்பு... காரணம் என்ன?