ETV Bharat / state

தென்காசியில் பிசான சாகுபடிக்காக அணைகள் திறப்பு - அடவிநயினார் கோவில்

தென்காசியில் பிசான சாகுபடிக்காக கருப்பாநதி, அடவி நயினார் கோயில் அணைகள் திறக்கப்பட்டன.

தென்காசியில் பிசான சாகுபடிக்காக அணைகள் திறப்பு

author img

By

Published : Sep 30, 2022, 5:14 PM IST

தென்காசி மாவட்டம் கருப்பாநதி, அடவிநயினார் அணைகளில் இருந்து பிசான சாகுபடிக்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. கடையநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட கருப்பாநதி நீர்த்தேக்கம் 72 கன அடி கொண்டது. கருப்பா நதி அணையின் கீழ் பெருங்கால், பாப்பான்கால், சீவலன்கால், இடைக்கால், கிளங்காடுகால், ஊர்மேலழகியான்கால் ஆகியவற்றின் மூலம் நேரடி மற்றும் மறைமுகப் பாசனம் என்று மொத்தம் 9,514.70 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

பிசான சாகுபடிக்கு கருப்பாநதி அணையில் இருந்து 30-9-2022 முதல் 26-2-2023 வரை 150 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 25 கனஅடி வீதம் 1,189.34 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த அணையின் மூலம் வைரவன்குளம், கிருஷ்ணாபுரம், சொக்கம்பட்டி, குமந்தாபுரம், போகநல்லூர் உள்ளிட்ட 14 கிராமங்கள் பயன் பெறுகிறது. கருப்பாநதி அணை தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், மாவட்ட பஞ்சாயத்து குழு தலைவி தமிழ்ச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டு அணையினை திறந்து வைத்தனர்.

தென்காசியில் பிசான சாகுபடிக்காக அணைகள் திறப்பு

இதே போல் 132 கன அடி கொண்ட அடவிநயினார் கோவில் அணையில் இருந்தும் இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. அடவிநயினார்கோவில் நீர்த்தேக்கத்தின் கீழ் பாசனம் பெறும் மேட்டுக்கால், கரிசல்கால், பண்பொழிகால், வல்லாக்குளம்கால், இலத்தூர்கால், நயினாரகரம்கால், கிளங்காடுகால், கம்பளிக்கால், புங்கன்கால், சாம்பவர் வடகரைகால் மற்றும் இரட்டைக்குளம் கால்வாய் ஆகியவற்றின் மூலம் நேரடி மற்றும் மறைமுக பாசனம் மூலம் 7,643.15 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

பிசான சாகுபடிக்கு அடவிநயினார்கோவில் நீர்த்தேக்கத்தில் இருந்து 30-9-2022 முதல் 26-2-2023 வரை 150 நாட்களுக்கு, நாள் ஒன்றிற்கு வினாடிக்கு 100 கனஅடி வீதம், 955.39 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தீண்டாமை வன்கொடுமை...மாவட்ட ஆடசியர் விசாரணை நடத்த உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.