நாடு முழுவதும் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அசைவ பிரியர்களுக்காக ஆட்டிறைச்சி அதிகளவில் விற்பனையாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆட்டிறைச்சி கடை வியாபாரிகள் ஆடுகளை விலைக்கு வாங்க சந்தைகளில் குவிந்து வருகின்றனர்.
கரோனா தொற்று காரணமாக சில மாதங்களாக மூடப்பட்டிருந்த சந்தைகள் அரசு அளித்த தளர்வுகளுடன் மீண்டும் செயல்படத் தொடங்கியது. இதையடுத்து தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ஆட்டுச்சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் மட்டும் செயல்பட்டு வருகிறது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் பல்வேறு இன ஆடுகளை விற்க அதன் உரிமையாளர்கள் சந்தைகளில் பெருமளவு குவிந்துள்ளனர். ஆடுகளுக்கு தாங்கள் எதிர்பார்த்ததைவிட கணிசமான விலை கிடைத்துள்ளதாகவும் அவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். ஆடுகள் நான்காயிரத்து 500 ரூபாய் முதல் 18 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆவதே அவர்களின் மகிழ்ச்சிக்கு காரணமாகியுள்ளது.
அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், சந்தைக்கு கிராமப்புறங்களில் இருந்து பலதரப்பட்ட மக்கள் வருவதால் தொற்று பரவக்கூடும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தீபாவளி விற்பனை: ஒரேநாளில் இரண்டு கோடிக்கு ஆடுகள் விற்பனை!