ETV Bharat / state

Tenkasi news: ஏக்கர் கணக்கில் வெள்ளை பூசணி - சந்தையில் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பெரும் வேதனை! - white pumpkin

தென்காசி மாவட்டம் நடுவக்குறிச்சியில் கிணற்று நீர் பாசனத்தை கொண்டு பூசணிக்காய் பயிரிட்டும் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

ஏக்கர் கணக்கில் வெள்ளை பூசணி பயிரிட்டு காய்கறி மார்க்கெட்டில் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பெரும் வேதனை.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 6:24 PM IST

ஏக்கர் கணக்கில் வெள்ளை பூசணி பயிரிட்டு காய்கறி மார்க்கெட்டில் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பெரும் வேதனை.

தென்காசி: நடுவக்குறிச்சி பகுதியில் ஏராளமான விவசாயிகள் வெள்ளை பூசணி பயிரிட்டுள்ள நிலையில் கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்படுவது விவசாயிகள் மத்தியில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே நடுவக்குறிச்சி கிராமம் உள்ளது. இந்தப் பகுதி முழுவதும் ஏராளமான விவசாயிகள் வெள்ளை பூசணிக்காய் பயிரிடுவது வழக்கம். மேலும் இந்த பூசணிக்காய் இந்த பகுதியில் ஏராளமான விவசாயிகள், கேரளா பகுதிக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம்.

மேலும் தென்காசி மாவட்டத்தை பொறுத்த அளவு அதிகப்படியான பொதுமக்கள் தங்களின் வாழ்வாதாரமாக விவசாய தொழிலையே அதிகமாக கொண்டுள்ளனர். மேலும் தற்பொழுது அதிகப்படியாக மழை இல்லாததனால் குளங்களில் தண்ணீர் வற்றும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் இதையும் கருத்தில் கொண்டு விவசாயிகள் தங்களுடைய விவசாயத்தை பாதிக்கும் வண்ணம் நடுவக்குறிச்சி பகுதியில் கிணற்று நீர் பாசனத்தை கொண்டு பூசணிக்காய் பயிரிட்டுள்ளனர். மேலும் அண்டை மாநிலமான கேரளத்திற்கு சுரண்டை, சங்கரன்கோவில், பாவூர்சத்திரம் ஆகிய மார்க்கெட்டிலிருந்து கொடிபயிர்களில் வெள்ளை பூசணியும், ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

வருடத்திற்கு ஒரு முறை மட்டும் ஒணம் பண்டிகை கேரளாவில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். மேலும் கேரளா மாநிலத்தில் அதிகப்படியான மக்கள் தங்கள் வீடுகளில் சமையலுக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் பொருட்களில் இந்த வெள்ளை பூசணியும் ஒன்று.

இதையும் படிங்க: ஊழல் மற்றும் பொருளாதார குற்றங்கள் தடுப்புச் சட்டங்களை திருத்த கோரிய வழக்கு - சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி

இதில் விட்டமின் பி, சி உடன், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மற்றும் நார்ச்சத்து வளமாக நிறைந்து உள்ளது. முக்கிய அம்சமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. உடல் எடையை குறைக்க மிகவும் உதவுகின்றது. பூசணிக்காயை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகிறது.

சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் இந்த வெள்ளை பூசணியில் நாட்டு சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் நோய்கள் முழுமையாக குணமாகும். வெள்ளை பூசணிக்காய் ரத்தத்தில் உள்ள நச்சுகளையும், கழிவுகளையும் வெளியேற்றி ரத்தத்தினை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.

வெண்பூசணி சாற்றை தொடர்ந்து அருந்தி வரும்பொழுது உடல் சோர்வு, தீராத தாகம் போன்ற பாதிப்புகள் குறைந்து உடலை குளிரச்செய்கிறது. இதனால் ஒணம் பண்டிகையொட்டி கேரள மாநிலம் செல்லும் வெள்ளை பூசணி, விலை குறைந்துள்ளது. தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெள்ளை பூசணி தினமும் 20 டன் அளவில் விற்பனைக்காக வருகிறது.

ஆனால் தற்போது வெள்ளை பூசணி கிலோ 10 ரூபாயாக விலை குறைந்து உள்ளது. மேலும் தற்பொழுது இந்தப் பகுதியில் ஏராளமான விவசாயிகள் வெள்ளை பூசணி பயிரிட்டும் உரிய விலை இல்லாதனால் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இதனால் இந்த பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எப்பொழுது தங்கள் விவசாயத்திற்கான நல்ல பலன் கிடைக்கும் என தென்காசி மாவட்டத்தின் விவசாயிகள் ஏங்கி நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் இளம்பெண் உயிரிழப்பு" - பெண்ணின் பெற்றோர் கதறல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.