தமிழ்நாட்டில் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஐந்து கட்டமாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அடுத்து ஆறாவது கட்டமாக தென் மாவட்டங்களில் முதலமைச்சர் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.
தென்காசி மாவட்டத்திற்கு வருகின்ற 18, 19 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் பரப்புரை மேற்கொள்கிறார். இதற்காக தென்காசியில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் தீவிரமாக முன்னேற்பாடு பணிகளை செய்து வருகின்றனர்.
அந்தப் பணிகளை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் இன்று (பிப்.16) ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, தென்காசி சட்டப்பேரவை உறுப்பினர் செல்வ மோகந்தாஸ் பாண்டியன், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: திமுகவைவிட அதிகமுறை ஆட்சி செய்தது அதிமுக: அமைச்சர் ஜெயக்குமார்!