புளியரை பகுதியில் தமிழ்நாடு எல்லை சோதனைச்சாவடி அமைந்துள்ளதால் எங்கள் கிராமத்திற்கு கட்டட வேலைகளுக்கு கொண்டுசெல்லும் மணல், ஜல்லி, செங்கல், விவசாயப் பொருள்களான நெல், வாழை, வீட்டு உபயோகப் பொருள்கள் அரிசி, பருப்பு, சிறுதானியம் கொண்டுசெல்லும் வாகனங்கள் சரியான ஆவணங்கள் இருந்தும் உள்ளே நுழைவதற்கு மறுப்பு தெரிவிக்கின்றனர்.
மேலும், கேரளா எல்லைக்குள் நுழைந்த 500 மீட்டரில் சோதனைச் சாவடி அமைந்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டின் உள்ளே 6 கிலோமீட்டர் தொலைவிற்கு பின்புதான் சோதனைச்சாவடி அமைந்துள்ளது. கேரளப் பகுதியிலிருந்து தமிழ்நாடு எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கோழி இறைச்சிக் கழிவுகள், பனைமர நுங்கு கழிவுகள், அழுகிய முட்டைகள், அழுகிய வாழை இலைகள், அழுகிய காய்கறிகள், மருத்துவக் கழிவுகள் என வீணான அனைத்துப் பொருள்களையும் கிராமப்புறங்களில் உள்ள சாலைகளில் கொட்டிச் செல்கின்றனர்.
இதனால் எங்கள் கிராமத்தில் பொதுச் சுகாதாரம் சீர்கெட்டு, பெருந்தொற்று நோய்கள் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு சோதனைச்சாவடியைக் கோட்டைவாசல் பகுதிக்கு மாற்றுவதற்காக மாவட்ட ஆட்சியர், அலுவலர்களுக்கு மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்த நிலையை மாற்றவும் எல்லைப் பகுதிகளைப் பாதுக்காக்கவும் புளியரைப் பகுதியில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு எல்லை சோதனைச்சாவடியைக் கோட்டைவாசல் பகுதிக்கு மாற்றியமைக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு, ”தமிழ்நாடு எல்லையான கோட்டை வாசலில் உடனடியாக தற்காலிக சோதனைச் சாவடியை ஏன் அமைக்கக் கூடாது. தமிழ்நாடு-கேரள எல்லைப் பகுதியான தேனி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்ட எல்லைகளிலும் தற்காலிக சோதனைச் சாவடி அமைக்க அந்தந்த மாவட்ட நிர்வாகங்களும் காவல் துறையும் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது” என்று கேள்வியெழுப்பினர்.
மேலும் இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: பொது வெளியில் மருத்துவக் கழிவுகளை வீசிச் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!