ETV Bharat / state

தீபாவளியை ஒட்டி குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

Tenkasi Courtallam falls: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குற்றாலத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், குற்றாலம் ஐந்தருவி, மெயின் அருவி மற்றும் பழைய குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் குவிந்துள்ளனர்.

Coutrallam Falls
குற்றால அருவி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 13, 2023, 1:12 PM IST

குற்றால அருவியில் குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்

தென்காசி: மேற்குதொடர்ச்சிமலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

மேலும், அவ்வப்போது அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கும் ஏற்படும் சூழலில், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தடைகள் விதிக்கப்படுகின்றன. ஆனால், தற்போது குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து சீராக உள்ளது.

இந்த நிலையில், தற்போது தீபாவளியை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்திற்கு படையெடுத்து உள்ளனர். தீபாவளி பண்டிகையை ஒட்டி, இன்றைய தினம் (நவ.13) விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றாலம் ஐந்தருவி, மெயின் அருவி மற்றும் பழைய குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் குவிந்த வண்ணமாகவே காணப்படுகின்றனர்.

மேலும், மெயின் அருவி பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. காலை முதலே ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவி நீரில், சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளியல் போட்டு வருகின்றனர். காலநிலை இதமான வெயிலோடு காணப்படுவதால், அருவிகளில் குளிப்பதற்கு ரம்யமான சூழல் நிலவுவதாக சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால், அருவி பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தென்காசி மாவட்டத்தில் மழைப்பொழிவு காரணமாக, வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்றுடன் இதமான சூழல் நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர். இதனால் சுற்று வட்டார வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆபத்தான முறையில் பைக் சாகசம் செய்து வீடியோ வெளியீடு.. இளைஞர்களை தட்டித் தூக்கிய போலீசார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.