தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அமைந்துள்ளது. கருப்பாநதி கூட்டுக் குடிநீர் திட்டம், தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் வாயிலாக அப்பகுதியைச் சுற்றியுள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் குடிநீர்த் தேவை பூர்த்தி செய்யப்பட்டுவருகிறது.
தற்போது கோடை வெயில் காரணமாக அணையானது வறண்டு காணப்படுகிறது. 72 அளவு கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது 24 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. இதில் 10 அடிவரை சகதி காணப்படுகிறது. தற்போது நீர்மட்டம் குறைவாக உள்ள காரணத்தால் தண்ணீர் வெளியேற்றப்படவில்லை.
இந்நிலையில் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் கருப்பாநதி அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை. மாறாக ஆற்றுப் பகுதியில் உள்ள உறை கிணறுகள் மூலம் தண்ணீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது. எனவே தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குற்றம் 03: உங்கள் அடையாளமும் திருடப்படலாம்!