தென்காசி: சங்கரன்கோவில் அருகே உள்ள வாசுதேவநல்லூர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் தென்காசி மாவட்ட கபடி கழகம் சார்பில் 69-ஆவது மாநில சீனியர் ஆண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி மின்னொளியில் நடைபெற்றது.
இதில் திருநெல்வேலி, தென்காசி, கரூர், தஞ்சாவூர், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ஈரோடு, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கபடி அணியினர் பங்கேற்று விளையாடினர். இதைத்தொடர்ந்து இன்று(மார்ச்.21) இறுதிப்போட்டி கன்னியாகுமரி மாவட்ட அணியினருக்கும் ஈரோடு மாவட்ட அணியினருக்கும் இடையே நடைபெற்றது.
இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்ட அணியினர் 39 புள்ளிகள் எடுத்து மாநில அளவில் முதலிடம் பெற்றனர். ஈரோடு மாவட்ட அணியினர் 24 புள்ளிகள் எடுத்து இரண்டாமிடம் பெற்றனர்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுக் கோப்பையை தங்கப்பழம் கல்விக் குழுமத் தலைவர் எஸ்.தங்கப்பழம் வழங்கினார். கபடி போட்டியை காண சிவகிரி புளியங்குடி வாசுதேவநல்லூர் சங்கரன்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.
இதையும் படிங்க: டாக்டர் சுப்பையாவிற்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது!