தென்காசி: கடையநல்லூர் அருகே தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கடையநல்லூர், சேர்ந்தமரம், வீரசிகாமணி, இடைகால், மங்களாபுரம் என பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இங்கே படித்து வரும் பெரும்பாலான மாணவர்கள் விவசாய குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். மேலும், இந்தப் பள்ளியின் நிர்வாகம் இங்கு படிக்கும் மாணவர்களைப் பல்வேறு விதமான நிகழ்ச்சியின் மூலம் அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருகிறது எனவும், மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விதமான நிகழ்ச்சியில் அரங்கேற்றமும் செய்து வருவதாக கூறப்படுகிறது.
அதில் ஒரு பகுதியாக, இன்று(டிச.13) ஸ்போர்ட்ஸ் டே பள்ளியில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நாளில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக, பள்ளிகளில் வைத்து நடைபெற்ற பல்வேறு விதமான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், கேடயங்களும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் கலந்து கொண்டு பள்ளியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தனர். இந்த கலை நிகழ்ச்சியில், பள்ளிக் குழந்தைகள் வண்ணக்குடைகளுடன் நடனம் ஆடி அனைவரையும் கவரச் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பல்வேறு விதமான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன. ஸ்கேட்டிங், ரிப்பன் கோபுரம், சிலம்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் உட்பட பெற்றோர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். மேலும், இந்நாளில் சிறப்பு விருந்தினராக கடையநல்லூர் உதவி ஆய்வாளர் ரவி மற்றும் தீயணைப்புத் துறை ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினர்.
இதையும் படிங்க: மதுரை அறங்காவலர் குழு நியமன ரத்து விவகாரம்: மனுவை தள்ளுபடி செய்து மதுரைக்கிளை உத்தரவு!