தென்காசி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அலுவலர் கருணாகரன் ஐஏஎஸ் இன்று கரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தார்.
அதைத்தொடர்ந்து தென்காசியில் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சிவனருள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுனா சிங் உள்ளிட்ட அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தென்காசி மாவட்டத்தில் இதுவரை 14 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு இடங்கள் ஹாட் ஸ்பாட் பகுதிகளாக கண்காணிக்கப்படுகின்றன. 14 பேரும் திருநெல்வேலி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த 14 பேருடன் யார் யார் தொடர்பில் இருந்தார்கள் என்பதை கண்காணித்து அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் இதுவரை 70 ஆயிரத்து 483 குடும்பங்கள், அதாவது 2 லட்சத்து 42 ஆயிரத்து நபர்களை சர்வே செய்து அதில் 2,034 நபர்கள் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்" என்றார்
இதையும் படிங்க: மாங்காய் சந்தைகளை ஏற்படுத்தித் தர விவசாயிகள் கோரிக்கை