தென்காசி: ரஜினிகாந்தின் வழி தனி வழி எனவே அவர் திராவிட இயக்கங்களுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு இல்லை என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
கட்சி நிர்வாகிகளை சந்திப்பதற்காக தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது; புதிய வேளாண் சட்ட மசோதா தமிழ்நாடு விவசாயிகளுக்கு எதிரானது அல்ல என முதலமைச்சர் விளக்கி பேசிய பிறகும், திமுக அரசியல் காரணத்திற்காக வேளாண் சட்டத்திற்கு எதிராக பேசி வருகிறது. தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்தவே திமுக முயற்சிப்பதால் நாளை(டிச.17) திமுக தலைமையில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும்.
மேலும், ரஜினிகாந்த் வழி தனி வழி, அவர் திராவிட இயக்கங்களுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு இல்லை, அவருக்கு தென் மாவட்டத்தில் நல்ல வரவேற்பு உள்ளதால் அவர் தனித்து நின்று வெற்றி பெற்று முதலமைச்சர் ஆவார்.
அவரின் இந்த பயணத்தில் இந்து மக்கள் கட்சியினருக்கு தொகுதி பங்கீடு தேவை இல்லை. நாங்கள் ரஜினிகாந்தின் போர் வீரர்களாக இணைந்து செயல்படுவோம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கூட்டணிக் கட்சிகளுக்காக உயிரையும் கொடுப்போம் - 'நண்பேன்டா'அமைச்சர் செல்லூர் ராஜு