ETV Bharat / state

அனுமதி பெறாமல் பள்ளி இயக்குவதாக குற்றச்சாட்டு - மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ....

author img

By

Published : Jul 12, 2022, 3:46 PM IST

Updated : Jul 13, 2022, 11:59 AM IST

தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் பகுதியில் அனுமதி பெறாமல் இயங்கி வரும் கல்வி நிறுவனம் தொடர்பாக சிவபாரத இந்து மக்கள் இயக்க மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

மனுவை கசக்கி முகத்தில் எறிந்த மாவட்ட ஆட்சியரை கண்டித்து அரை நிர்வாண போராட்டம்!

தூத்துக்குடி: அனுமதி பெறாமல் இயங்கி வரும் தூத்துக்குடி வேலவன் வித்யாலயா பள்ளி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிவபாரத இந்து மக்கள் இயக்க மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் மனு அளித்துள்ளார். ஆனால் ஆட்சியர் செந்தில் ராஜ் அவர் மீது மனுவை தூக்கி எறிந்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் அரை நிர்வாணத்துடன் பாலசுப்பிரமணியன் போராட்டம் நடத்தினார். மேலும், அவர் கூறுகையில், தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் வேலவன் வித்யாலயா கல்வி நிறுவனம் சட்டத்தை மீறி அனுமதி பெறாமல் இயங்கி வருகிறது.

இப்பள்ளி மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்காதது ஏன்? அந்த நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித் துறை தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? என கேள்வி எழுப்பிய அவர், சிப்காட் தொழிற்பேட்டையில் வரம்பு மீறி பள்ளியை கட்டியுள்ளனர்.

ஆகவே, மாவட்ட நிர்வாகம் கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களை மாற்றுப் பள்ளிக்கூடங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக மனு அளிக்க சென்ற நிலையில், மாவட்ட ஆட்சியர் மனுவை தூக்கி எறிந்தது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: இலங்கையில் தொடர் போராட்டம் - 2 அமைச்சர்கள் ராஜினாமா

Last Updated : Jul 13, 2022, 11:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.