ETV Bharat / state

8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

தென்காசியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ரூபாய் 8 லட்சம் மதிப்புள்ள குட்கா, புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

8 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்

author img

By

Published : Aug 2, 2021, 9:48 PM IST

தென்காசி: தமிழ்நாட்டில் பான்பராக், குட்கா, புகையிலைப் பொருட்கள் விற்கத் தடை செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோதப் புகையிலை பொருட்கள் விற்பனையைத் தடுப்பதற்காக காவல் துறையினர் தீவிர தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாகனத் தணிக்கை

இதன்படி தென்காசி புளியங்குடி அருகேயுள்ள முள்ளிக்குளத்தில் காவல் துறையினர் இன்று (ஆக.2) வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த லாரியை சோதனை செய்தபோது அதில் தடைசெய்யப்பட்ட 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை, குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சேலத்தில் இருந்து புகையிலைப் பொருட்கள் கொண்டுவந்ததாக தெரிவித்தனர்.

இதுதொடர்பாக வியாபாரி செங்கான், கடையநல்லூரைச் சேர்ந்த முத்துக்குமார், துரை, சேலத்தைச் சேர்ந்த நடராஜன், கோவிந்தராஜ் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.

கடத்தலுக்குப் பயன்படுத்திய லாரி, ரூபாய் 12 லட்சம் பணம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: மதுரையில் மாமனாரை நடுரோட்டில் விரட்டி வெட்டிய மருமகன் - அதிர்ச்சி வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.