தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டுவருகிறது.
தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்கள், ஊர்க்காவல் படையினருக்குமான அஞ்சல் வாக்கு முகாம் இன்றும் (மார்ச் 31), நாளையும் (ஏப்ரல் 1) நடைபெறுகிறது.
இதில் தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்ரன்கோவில் ஆகிய ஐந்து தொகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் 1,359 காவலர்களுக்கும், 165 ஊர்க் காவல் படையினருக்கும் அந்தந்தத் தொகுதிகள் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில் தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், அஞ்சல் வாக்கு முகாம் நடைபெற்றது.
இதில் காவலர்கள் முதற்கட்டமாக முகக்கவசம், உடல் வெப்ப பரிசோதனைக்குப் பின்னர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்துச் சென்றனர்.
இதையும் படிங்க: அவரவர் தாய்மொழியில் மருத்துவம், தொழில்நுட்பக் கல்வி - பிரதமர் மோடி