ETV Bharat / state

தென்காசியில் ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த நபர் கைது!

Fraud by claiming to get a job in Railways: தென்காசியில் முகம் தெரியாத நபர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல இலட்சம் மோசடி செய்த நபர் கைது

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2023, 10:27 AM IST

தென்காசி: தென்காசி மாவட்டம் அச்சன்புதூரைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மற்றும் சுரண்டையைச் சேர்ந்த திருமலை குமார் ஆகியோருக்கு முகம் தெரியாத ஒருவர், அடிக்கடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தான் வேலைவாய்ப்பு அலுவலத்தில் பணிபுரிவதாகவும், தனக்கு முக்கிய பிரமுகர்கள் பலரைத் தெரியும் என்று கூறி பழக்கமாகி உள்ளார். மேலும், ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, முத்துராமலிங்கத்திடம் இருந்து 6 லட்சத்து 80 ஆயிரத்து 800 ரூபாயும், திருமலை குமாரிடம் இருந்து 5 லட்சத்து 42 ஆயிரத்து 800 ரூபாயும் பெற்று மோசடி செய்துள்ளார்.

தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த முத்துராமலிங்கம் மற்றும் திருமலை குமார், தென்காசி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில், திருநெல்வேலி மாவட்டம், டவுன் பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்பவரின் மகன் பிச்சை கண்ணு (42) இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து பிச்சைக்கண்ணு தலைமறைவாய் இருந்ததால், மாவட்ட கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், துணை காவல் கண்காணிப்பாளர் தனராஜ் கணேஷ் அறிவுறுத்தலின்படி, காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள் செல்வி தலைமையில் துணை ஆய்வாளர்கள் செண்பக பிரியா, தனசேகரன், கருப்பசாமி கோபி, சதிஷ் குமார் ஆகியோரோடு தனிப்படை அமைத்து பிச்சைக்கண்ணுவைத் தேடி வந்துள்ளனர்.

அதன் பின், பிச்சைக்கண்ணுவின் செல்போன் டவரை வைத்து, பிச்சைக்கண்ணு மதுரையில் இருப்பதைக் கண்டுபிடித்த போலீசார், அவரைப் பிடித்து தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், விஷேச நிகழ்ச்சிகளுக்கு பாட்டு கச்சேரி நடத்தி வரும் பிச்சைக்கண்ணு தொலைபேசி மூலம் முகம் தெரியாத நபர்களை தொடர்பு கொண்டு, ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, லட்சக்கணக்கில் பண மோசடி செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும் சிவகாசி, சொக்கம்பட்டி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 50 லட்சம் ரூபாய்க்கும் மேல் மோசடி செய்தது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து இதற்காக பிச்சைக்கண்ணு பயன்படுத்திய ஐந்து செல்போன்களையும் பறிமுதல் செய்த போலீசார், குற்றச் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: டேட்டிங் செயலி மூலம் சீட்டிங்.. ஓரினச்சேர்க்கைக்கு ஆசைகாட்டி மோசடி செய்த கும்பல் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.