தென்காசி மாவட்டத்தில் பிரதானமான தொழில் விவசாயம். இந்த மாவட்டம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் புதியதாக உருவெடுத்தது முதல் இதுவரை விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் மூன்று தடவை மட்டுமே நடத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளனை சந்தித்து மனு அளித்தனர். விவசாயிகள் அளித்த மனுவில், "கரோனா காலகட்டத்தில் விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். இந்தச் சூழலில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கரோனா தொற்று பரவல் காரணமாக நடத்தப்படாததால், குறைகளை எடுத்துரைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக உரம், குளங்கள், கால்வாய்கள், காப்பீடு உள்ளிட்ட ஏராளமான பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.
எனவே இவைகளை கலந்தாய்வு செய்யவும், தீர்வு காணுவதற்கும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட வேண்டும். பிற மாவட்டங்களில் கூட்டமானது தற்போது நடைபெற்றுவரும் நிலையில், தென்காசி மாவட்டத்திலும் நடத்தி விவசாயிகள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வழிவகுக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது.
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை நடத்த கோரி ஆட்சியரிடம் மனு - விவசாயிகள் குறைதீர் கூட்டம்
தென்காசி: நடைபெறாமல் இருக்கும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை மாதந்தோறும் தடையின்றி நடத்த கோரி அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.