ETV Bharat / state

கார் மோதி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பலி - பொதுமக்கள் சாலை மறியல்

author img

By

Published : Jan 31, 2022, 8:21 AM IST

சங்கரன்கோவில் அருகே கார் மோதி திமுக முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அப்பகுதிமக்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

கார் மோதி முன்னாள் திமுக பஞ்சாயத்து தலைவர்

தென்காசி: சங்கரன்கோவில் பெருங்கோட்டூர் கிராமத்தில் இரண்டு முறை பஞ்சாயத்து தலைவராகவும், ஒரு முறை கவுன்சிலராகவும் இருந்தவர் திமுகவை சேர்ந்த காளைபாண்டியன். இவர் தற்போது திமுக கிளை செயலாளராக உள்ளார்.

இந்நிலையில் இவர் நேற்றிரவு(ஜன.30) பெருங்கோட்டூரில் இருந்து சங்கரன்கோவில் நோக்கி, தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே அதிவேகமாக வந்த கார் ஒன்று காளைபாண்டியனின் வாகனத்தில் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.

அதில் இரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த காளை பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், உடனடியாக அவரின் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதனிடையே மருத்துவமனை முன் திரண்ட அவரது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: திருவள்ளூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.