தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே புளியரையில் புகழ் பெற்ற தெட்சணாமூர்த்தி கோவில் உள்ளது. இதன் அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு புகுந்த கரடி ஒன்று, அப்பகுதியில் உலாவி வருகிறது.
தென்னைமரத்தில் ஏறிய கரடியை அப்பகுதி மக்கள் கஷ்டப்பட்டு விரட்டினார்கள். ஆனால், அதன் பிறகு கோயில் படிகளில் ஏறும் காட்சிகளும், அங்கிருந்த கரையான் புற்றுக்களை கலைக்கும் காட்சிகளும் கோயிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகிருந்தது.
இதுகுறித்து வனத்துறைக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வனக்கால்நடை பிரிவு மருத்துவர்கள், அதிவிரைவு மீட்பு குழுவினர், வனத்துறையினர் கூண்டு வைத்தும் மற்றும் மயக்க ஊசி போட்டும் கரடியை பிடிப்பதற்காக அப்பகுதியில் முகாமிட்டு காத்துக் கொண்டிருக்கின்றனர்.