தென்காசி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தலைமையில் எடுக்கப்பட்டுவருகின்றன.
அதன்படி மாவட்டத்தில் தீயணைப்பு வாகனங்கள், அவசர ஊர்திகளைத் தயார் நிலையில் வைக்க வேண்டும். ஒவ்வொரு வாகனத்தையும் பழுதுநீக்கி தேவையான பேட்டரி, ஜெனரேட்டர், கைவிளக்கு ஆகியவற்றைச் சரிசெய்து நல்ல நிலையில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் தீயணைப்புத் துறைத் தலைவர் சைலேந்திரபாபு, மாவட்ட அலுவலர் மகாலிங்கமூர்த்தி ஆகியோரின் உத்தரவுப்படி, தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு பருவமழைக்குத் தயாராகும்விதமாக தீயணைப்புத் துறையினரைக் கொண்டு ஒத்திகைப் பயிற்சி மதளம்பாறை குளத்தில் நடத்தப்பட்டது.
இதில் தீயணைப்பு வீரர்கள் குளத்தில் மூழ்கியவர்களை மீட்டு முதலுதவி அளிப்பது, குளத்தில் ரப்பர் டியூப்களைப் பயன்படுத்துவது குறித்த ஒத்திகைகள் இடம்பெற்றன.
இதையும் படிங்க: முன்னாள் மத்திய அமைச்சர் சிந்தியாவுக்கு கரோனாவா?