தென்காசி: குற்றாலம் மெயின் அருவி நுழைவு வாசல் எதிரே உள்ள தனியார் விடுதி விடுதியில் ஆகஸ்ட் 30ஆம் தேதி மதுரை மாவட்டம் திருநகரை சேர்ந்த மகாலிங்கம்(55) அவரது மனைவி காமாட்சி, மகள் தனபிரியா அறை எடுத்து தங்கினர். இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் அறையின் கதவு திறக்கப்படாமல் பூட்டி இருந்துள்ளது. துர்நாற்றமும் வீசிய உள்ளது. இதனால் விடுதியின் ஊழியர்கள் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது மகாலிங்கம், காமாட்சி உயிரிழந்த நிலையிலும், தனபிரியா உயிருக்கு ஆபத்தான நிலையிலும் கிடந்துள்ளனர்.
![தற்கொலை எண்ணம் தோன்றினால் சிநேகா உதவி எண்களை அழையுங்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16280014_dssss.jpg)
இதனைத் தொடர்ந்து குற்றாலம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து இரண்டு பேரின் உடல்களை மீட்டனர். தனபிரியா தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
முதல்கட்ட விசாரணையில் கடன் பிரச்சனையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும், கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் மகாலிங்கத்தின் மகனு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
இதையும் படிங்க: பாலியல் சீண்டலுக்கு ஒத்துழைக்காத பெண் ரயிலிலிருந்து தள்ளி விட்டுக்கொலை