ETV Bharat / state

கடன் பிரச்னையால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: கணவன் உயிரிழப்பு - குடும்பத்துடன் தற்கொலை முயற்சி

தென்காசி: கடன் பிரச்னையால் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில், கணவன் உயிரிழந்தார். மனைவி, குழந்தைகள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குடும்பத்துடன் தற்கொலை முயற்சி
குடும்பத்துடன் தற்கொலை முயற்சி
author img

By

Published : Dec 28, 2020, 10:45 PM IST

Updated : Dec 28, 2020, 10:54 PM IST

தென்காசி மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கண்ணன் (40), இவரது மனைவி சீதாலெட்சுமி (31). இத்தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள், குடும்பத்துடன் சுரண்டை அருகே உள்ள குலையனேரி கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்துவருகின்றனர்.

இத்தம்பதியினருக்கு கடன் பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது. கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமையால் ஏற்பட்ட மன அழுத்தத்தினால் கண்ணன், சீதாலட்சுமி இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தாங்களும் விஷமருந்தியுள்ளனர்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரியவவே 4 பேரையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மனைவி சீதாலட்சுமி மற்றும் இரண்டு குழந்தைகள் என மூன்று பேரும் மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து சேர்ந்தமரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:தாய்க்கு தெரியாமல் விற்கப்பட்ட பெண் குழந்தை - பெங்களூரு சென்று குழந்தையை மீட்ட தனிப்படை!

Last Updated : Dec 28, 2020, 10:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.