ETV Bharat / state

குற்றாலத்தில் கொட்டித் தீர்த்த மழை.. அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் மழைநீர்! சுற்றுலா பயணிகளுக்கு தடை!

Tourists not allowed to courtallam falls: விடிய விடிய பெய்த மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையினரின் கண்காணிப்பு கூண்டும் வெள்ளப் பெருக்கினால் சேதம் அடைந்துள்ளது.

குற்றாலத்தில் கொட்டித்தீர்த்த மழை: சுற்றுலா பயணிகளுக்கு தடை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 2, 2023, 12:03 PM IST

தென்காசி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கன மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களும் சீசன் காலமாக கருதப்படுவதால் இந்த காலங்களில் பல மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் தென்காசி நோக்கி படையெடுப்பார்கள்.

குற்றாலத்தில் கொட்டித்தீர்த்த மழை: சுற்றுலா பயணிகளுக்கு தடை

இந்த வருடம் சீசன் காலம் முடிந்தும் தென்காசி மாவட்டத்தில் அதிகப்படியாக மழை பெய்து வருவதால் குற்றால அருவியில் அவ்வப்பொழுது காற்றாற்று வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, பாவூர்சத்திரம், ஆலங்குளம், சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் நேற்று (நவ. 1) இரவு பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று (நவ. 2) பெய்த கன மழையின் காரணமாக குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: ரயில் மோதி யானைகள் உயிரிழப்பை தவிர்க்க திட்டம்! ரயில் பாதைகளில் செயற்கை நுண்ணறிவு கேமரா பொருத்தி சோதனை!

இந்த வெள்ளப்பெருக்கினால் காவல் துறையினரின் கண்காணிப்பு கூண்டு சேதம் அடைந்தது. மேலும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வரக்கூடிய பொதுமக்களுக்கு இரவு மற்றும் பகல் நேரங்களில் பாதுகாப்பு வழங்க அமைக்கப்பட்ட கூண்டும் வெள்ளப்பெருக்கினால் சேதம் அடைந்தது.

இதன் காரணமாக பாதுகாப்பு கருதி பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் பாதுகாப்பு கருதி மக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வால்பாறை அருகே குடியிருப்பை துவம்சம் செய்த யானைக் கூட்டம்.. அச்சத்தில் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.