தென்காசி மாவட்டம், சின்ன கோவிலாங்குளம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தளவாய்புரம் பகுதியில் வசித்து வந்த வெங்கடேசன் என்பவர், கடந்த 2015ஆம் ஆண்டு தனது மனைவி மற்றும் 6 மாத கைக்குழந்தையை கொலை செய்த வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில், திருநெல்வேலி மகிளா நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நேற்று (டிச.26) விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றவாளியான வெங்கடேசன் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையோடு, ரூ.25,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேலும், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 8 கொலை வழக்கின் குற்றவாளிகளுக்கும், 2 போக்சோ வழக்கின் குற்றவாளிகளுக்கும், 1 பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிக்கும் ஆயுள் தண்டனையை தென்காசி மாவட்ட காவல்துறையினர் பெற்று தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மேயர் குழந்தைக்கு "திராவிட அரசன்" எனப் பெயர் சூட்டிய முதலமைச்சர்