ETV Bharat / state

அமைச்சர் உதயநிதி பிறந்தநாள் : அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளித்த திமுக நிர்வாகிகள்! - பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு

அமைச்சர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு தென்காசியில் அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு திமுகவினர் தங்க மோதிரம் பரிசாக வழங்கினர்.

தென்காசியில் அமைச்சர் உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2023, 3:53 PM IST

தென்காசியில் அமைச்சர் உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்

தென்காசி: அமைச்சர் உதயநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி இன்று (நவ. 27) அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு திமுக நகர கழகம் சார்பில் தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், தனது 47வது பிறந்த நாளை இன்று (நவ. 27) கொண்டாடி வருகிறார்.

அவரது பிறந்த நாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் திமுக மன்றங்கள் கோலாகலம் அடைந்து உள்ளன. திமுகவினர் தமிழ்நாடு முழுவதும் இனிப்புகள் வழங்கியும், பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சியில் ஈடுபட்டும் அமைச்சர் உதயநிதியின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் காசி விஸ்வநாதர் ஆலயம் அருகில் சுவாமி சன்னதி முன்பு திமுக நகரக் கழகம் சார்பில் நகரச் செயலாளர் சாதிர் தலைமையில் ஏராளமான திமுகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து இன்று (நவ. 27) தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கி திமுக நிர்வாகிகள் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் திமுகவை சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: பிஜேடியில் இணைந்த வி.கே.பாண்டியன்.. ஐஏஎஸ் பதவியை துறக்க காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.