ETV Bharat / state

கடையநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியில் களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுதாக்கல் - தென்காசி தேர்தல் செய்திகள்

தென்காசி: கடையநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியில் நேற்று (மார்ச். 16) திமுக, அதிமுக வேட்பாளர்கள், தங்கள் கூட்டணிக் கட்சி தொண்டர்கள் படையுடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

தென்காசி சட்டப்பேரவை
தென்காசி சட்டப்பேரவை
author img

By

Published : Mar 17, 2021, 7:45 AM IST

தென்காசி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி பல்வேறு கட்சிகள் பரப்புரை, வேட்புமனு தாக்கல் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல்

அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக, அமமுக சார்பில் வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்பட்டு, பொது மக்களை சந்தித்து அவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேட்பு மனு தாக்கல்

திமுக கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான முகமது அபுபக்கர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவார் என முன்னதாக அறிவிக்கப்பட்டடது. இந்நிலையில் இன்று (மார்ச் 16) கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் கடையநல்லூர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தென்காசி சட்டப்பேரவை
தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல்
அதைத்தொடர்ந்து, அதிமுக சார்பில் தென்காசி, வடக்கு மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி என்ற குட்டியப்பா, கடையநல்லூர் சாலையில் 500க்கும் மேற்பட்ட அதிமுக, அதிமுக கூட்டணிக் கட்சி தொண்டர்களுடன் வருகைதந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இதையும் படிங்க: 'காட்பாடியில் துரைமுருகனுக்கு எதிராகக் களமிறங்கும் அதிமுக வேட்பாளர் மனு தாக்கல்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.