தென்காசி மாவட்டம் புதூர், புளியரை, தெற்குமேடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது பிசான சாகுபடி அறுவடை நடைபெற்று வருகிறது. கடந்த 4ஆம் தேதி புளியரையில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டது. தினசரி 1000 மூட்டை நெல் கொள்முதல் என்ற நிலையில் தொடங்கப்பட்ட இந்த கொள் முதல் நிலையத்தில் தற்போது 20நாட்களைக் கடந்தும் 6 ல் ஒரு பங்காக 4000 மூட்டை நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
அறுவடை ஆரம்பித்த ஜனவரி 26 ஆம் தேதி முதல் இன்று வரை இரவு பகலாக விவசாயிகள் நெல் மூட்டையைக் காவல் காத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று காலை வரை கொள்முதல் நிலையம் திறக்கப்படாத நிலையில் ஏராளமான விவசாயிகள் அங்கு குவிந்துள்ளனர். இது குறித்து விவசாய சங்க தலைவர் செல்லத்துரை கூறும் போது, நெல் கொள்முதல் நிலைய அலுவலர்கள் சரிவர வரவில்லை. அதே போல் நெல் கொள்முதல் சரியான முறையில் செய்யவில்லை எனவும், இதனால் விவசாயிகள் பல போராட்டங்களை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: வந்தது வலிமை - திரையரங்குகளில் திருவிழா!