ETV Bharat / state

"ஏலே நீ ஒரு Artist-னு நிரூபிச்சிட்டல" - பிரமிக்க வைத்த தென்காசி வீடு!

author img

By

Published : Feb 13, 2023, 10:56 AM IST

தென்காசியில் அடுக்கி வைத்த அட்டைப்பெடிகள் சரிந்து கிழே விழுவது போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ள வீடு அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது.

பிரமிக்க வைத்த தென்காசி வீடு
பிரமிக்க வைத்த தென்காசி வீடு

பிரமிக்க வைத்த தென்காசி வீடு

தென்காசி: அனைவரது வாழ்விலும் முதல் லட்சியமாக தனக்கென அழகான ஒரு வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். இருப்பிடம் என்பது அத்தியாவசிய தேவைகளில் மிக முக்கியமானதாக உள்ளது. அதனால் தான் வீடுகள் மீது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கனவுகள் இருக்கின்றன. அந்தக் கனவு வீட்டை எப்படியாவது கட்டிவிட வேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொருவரும் பயணித்து வருகின்றனர்.

அந்த வகையில் தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள வெல்கம் நகர் பகுதியில் ஒருவர் வீடு ஒன்றை கட்டியுள்ளார்.பொதுவாக வீடு வலுவாக இருக்க வேண்டும், பார்ப்போரை கண்ணை கவர வேண்டும், நல்ல சிமெண்ட், கம்பி போன்ற மூலப் பொருட்களால் கம்பீரமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

தென்காசியில் அனைவரது கவனத்தை ஈர்த்துள்ள வீடானது அடுக்கி வைத்த அட்டைப்பெடிகள் சரிந்து கிழே விழுவது போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் தென்காசி மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். இது மட்டும் இல்லாது அந்த வழியை செல்லும் பொதுமக்கள் அந்த வீட்டின் முன் நின்று செல்ஃபி எடுத்தும் செல்கின்றன.

சமூக வலைத்தளங்களில் பலரும் ஏய் எப்புட்ரா..? என்ற சிறுவன் மற்றும் ஜி.பி.முத்துவின் டேம்பிளேட்டுகளை வைத்து அந்த வீட்டை கட்டிய கலைஞருக்கு லைக்ஸ் போட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டை உலுக்கிய 2 கொள்ளை சம்பவம்.. ஒரே கும்பல் கைவரிசை?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.