கரோனா தொற்று நோய் பரவல் காரணமாக ரயில் போக்குவரத்து கடந்த 5 மாதங்களில் நிறுத்திவைக்கப்பட்டு பின்னர் அக்டோபர் முதல் ரயில் போக்குவரத்து ஓரளவு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டுவருகிறது.
மேலும் ரயிலில் முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் ரயில் பயணிகள் அனைவரையும் முழுமையான சோதனை செய்யப்பட முடியாத நிலை இருப்பதால் ரயில் நிலையங்கள் நவீன கண்காணிப்பு கருவி மூலம் அவர்களை சோதனை செய்யும் முறையை செயல்படுத்தப்பட்டு தனி அறை அமைக்கப்பட்டு அதில் கணினி வசதியோடு கூடிய ஸ்கேனர் வசதியும் நவீன கேமராக்கள் வசதியும், அமைக்கப்பட்டுள்ளன.
அந்த ஸ்கேனர் மூலம் அவர்களது உடல் வெப்பநிலை கண்டறிந்த பின்னர் அவர்முன்பதிவு செய்த பயணச்சீட்டை சீட்டையும் ஸ்கேன் செய்த பின்னரே அவர் ரயில் நிலையத்திற்குள் செல்வதற்கும், பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகிறார்.
தமிழ்நாடு - கேரளா எல்லையான தென்காசி, செங்கோட்டை ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் இந்த வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஏராளமான பயணிகள் முறையாக பரிசோதனை செய்த பின்பே ரயில் நிலையத்திற்குள் ரயிலில் ஏற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த கண்காணிப்பு பணியில் இரண்டு அலுவலர்களும் ரயில்வே பாதுகாப்புப்படை அலுவலரும் நியமிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ரயில் நிலையங்களில் கரோனா தடுப்பு நவீன கண்காணிப்பு கருவி பொருத்தம் - கரோனா தடுப்பு நவீன கருவிகள்
தென்காசி: செங்கோட்டை ரயில் நிலையத்தில் கரோனா தடுப்பு நவீன கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது.