ETV Bharat / state

குற்றால அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம்.. தரைக்கற்கள் முற்றிலும் சேதம் - அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? - Tenkasi rainfall

Courtallam waterfalls: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த தொடர் மழையால் குற்றால அருவிகளில் மூன்றாவது நாளாக வெள்ளப்பெருக்கு நீடித்து வருகிறது. இந்த வெள்ளப்பெருக்கினால் மெயின் அருவியின் பல பகுதிகள் சேதமடைந்து காணப்படுகிறது.

சுவர் மற்றும் தரை கற்கள் சேதம்
குற்றால அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 19, 2023, 12:30 PM IST

குற்றால அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம்

தென்காசி: குற்றால அருவியில் நேற்று முன்தினம் முதல் ஏற்பட்ட தொடர் காட்டாற்று வெள்ளத்தால், அருவி பகுதியில் அமைந்துள்ள சுவர் மற்றும் தரைக்கற்கள் சேதமடைந்துள்ள நிலையில், அவற்றை சரி செய்த பின் பொதுமக்கள் அருவிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக, வருகிற 22ஆம் தேதி வரை தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால், தென்காசி உட்பட தமிழகத்தின் தென் மாவட்டங்கள் அனைத்தும் வெள்ளக்காடாக மாறியுள்ளது.

அந்த வகையில், தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்திருக்கும் குற்றால அருவிகளில் தொடர் கனமழையால், நேற்று முன்தினம் முதல் நீர்வரத்து அதிகரித்து, அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதையும் படிங்க: நெல்லையில் வெள்ளநீரில் மிதந்து வந்த ஆண் சடலம்: பதைபதைக்க வைக்கும் வீடியோ!

இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக தற்போது வரை குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளமானது ஏற்பட்டது. மேலும், மெயின் அருவி பகுதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளப்பெருக்கினால் மெயின் அருவியின் மேல் பகுதியில் இருந்து மரத்துண்டுகள், பாறைகள் மற்றும் மண் அடித்து வரப்பட்டன.

இந்நிலையில், நேற்று இரவு முதல் மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால், தற்போது குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கும் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், இந்த காட்டாற்று வெள்ளம் காரணமாக அருவிப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சுவர் மற்றும் தரைக்கற்கள் ஆகியவை சேதம் அடைந்து காணப்படுகிறது. இதைத் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு முற்றிலுமாக குறைந்த பின்னர், அருவி பகுதி சுத்தம் செய்யப்பட்டு, பின் பொதுமக்கள் குளிக்க அனுமதி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நிரம்பிய வைகை அணை; கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.