ETV Bharat / state

Courtallam: குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி - சுற்றுலாப் பயணிகள் குதூகலம்! - தென்காசி செய்திகள்

குற்றால அருவிகளில் தற்போது வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனைத்து அருவிகளிலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வெள்ளப் பெருக்கு குறைந்ததைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க அனுமதி

author img

By

Published : Jul 8, 2023, 11:16 AM IST

வெள்ளப் பெருக்கு குறைந்ததைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க அனுமதி

தென்காசி: மேற்குதொடர்ச்சிமலைப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் கடந்த இரு நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலாப் பயணிகளை குளிக்க காலையில் தடை விதிப்பதும், பின் மாலையில் குளிக்க அனுமதிப்பதும் தொடர்ந்து வாடிக்கையாகி வந்தது.

குற்றால சீசன் என்பது மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக இருக்கும். இந்த ஆண்டு சீசன் ஆனது சரியான நேரத்தில் தொடங்காமல் சற்று காலதாமதமாக தொடர்ந்ததால், சீசன் வருவதற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் காத்திருந்தனர். தற்போது தினசரி குற்றாலம் பகுதியில் மழை பெய்து வருவதாலும், மேலும் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதாலும் தென்காசி மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சூழ்நிலை உருவாகியுள்ளது.

தென்காசி மாவட்டத்தைப் பொறுத்த அளவில், மாவட்டம் முழுவதும் தினசரி சாரல் மலையுடன் இருப்பதால் குற்றாலம் அருவிகளில் அவ்வப்போது தண்ணீர் வரத்து அதிகம் ஆவதும், குறைவதும் வழக்கமாக உள்ளது. மேலும், தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் பகுதி மிகவும் பிரசித்த பெற்ற இடமாகும். இந்தப் பகுதிக்கு ஆண்டுதோறும் பல மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டும் பல்வேறு விதமான மாவட்டங்களில் இருந்து ஒவ்வொரு நாளும் சுற்றுலாப் பயணிகள் குற்றால அருவிக்கு வருகை தருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாகவே கனமழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மழை பெய்து வருவதால் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சுற்றுலாப் பயணிகள் அவ்வப்போது குளிக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (ஜூலை 8) காலை முதல் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

இதனால் அருவிகளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர். மேலும், இந்த வருடம் சீசன் ஆனது வெகு சிறப்பாகவே அமைந்துள்ளது. குற்றாலத்தைப் பொறுத்தளவு பல்வேறு விதமான சுற்றுலாத்தலங்கள் உள்ளன. இதில் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் குற்றாலம் மெயின் அருவி பகுதிக்கு வருவது வழக்கமாக உள்ளது.

மேலும் தற்பொழுது குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். தொடர்ந்து சாரல் மழையும், வெயிலும் மற்றும் இதமான காற்றும் வீசுவதால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: பர்னிச்சர் கடையில் டிவி வாங்குவது போல் நடித்து திருட்டு - சிசிடிவி காட்சி மூலம் போலீஸ் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.