ETV Bharat / state

காவல் துறையினர் மீது பொய் வழக்கு தொடுத்தவருக்கு அபராதம் - false charges on police department

காவல் துறையினர் மீது பொய்யாக ஆட்கொணர்வு வழக்குத் தொடுத்தவருக்கு அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவல் துறையினர்
காவல் துறையினர்
author img

By

Published : Feb 3, 2022, 8:07 AM IST

தென்காசி: இரண்டு ஆண்டுகளுக்கு முன் பண மோசடி புகார் தொடர்பாக செங்கோட்டை காவல் நிலையத்திற்கு கோவில்பட்டியைச் சேர்ந்த ஜெய வேலன் என்பவரை காவல் துறையினர் விசாரணைக்காக அழைத்துவந்தனர்.

அதன்பின்னர் ஜெய வேலன் தலைமறைவாகிவிட்டு அவரது மனைவி சௌக்கிய தேவியின் மூலம், ஜெய வேலன் காணாமல்போனதாக காவல் துறையினரின் மீது மதுரை உயர் நீதிமன்றத்தில் (HCP 259/2020) ஆட்கொணர்வு மனுவைச் சமர்ப்பித்தார்.

இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவந்தனர். இதனையடுத்து, தனிப்படையினர், தலைமறைவானவரின் சிசிடிவி பதிவுகளையும், இதர வழக்கின் கோப்புகளையும் நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் சமர்ப்பித்தனர்.

நீதிமன்றத்தில் ஜெய வேலன் தலைமறைவானது கண்டறியப்பட்டது. வழக்கில் பிரதிவாதிக்காக வாதாடிய வழக்கறிஞர் வெங்கட்ரமணன், இந்த வழக்கில் காவல் துறையினரைப் பாராட்டி, பொய் வழக்குத் தொடுத்தவருக்கு அபராதம் விதிக்க வேண்டும், காவல் துறையினருக்கு உரிய வெகுமதி கிடைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரினார்.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் புகழேந்தி, கல்யாண சுந்தரம் ஆகியோர் காவல் துறையினரின் துரித நடவடிக்கையைப் பாராட்டியும் பொய்யாக வழக்குத் தொடுத்து காவல் துறையினரை அலைக்கழித்த ஜெய வேலன், அவரது மனைவி சௌக்கிய தேவி ஆகியோரை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த இழப்பீட்டுத் தொகையை ஜெய வேலன் காவல் துறையினரின் வங்கிக் கணக்கில் செலுத்தினார். பின்னர், நீதிமன்ற உத்தரவின்படி தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், வழக்கில் பணியாற்றிய செங்கோட்டை காவல் ஆய்வாளர் அரிஹரன் (தற்போது பேட்டை திருநெல்வேலி), ஷியாம் சுந்தர், சிறப்பு சார்பு ஆய்வாளர் சண்முகநாதன், தலைமை காவலர்கள் சீவலமுத்து, அருள், காளிதாஸ், காவலர் முத்துக்குமார் ஆகியோரை நேரில் அழைத்துப் பாராட்டுத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நாகையில் 500 கிலோ கடத்தல் கஞ்சா பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.